நிலோபர் சுரவர்தி
கௌண்டர்கரண்ட்ஸ்
அரசியல்
நாடகத்தில் முன்னிலையில் இருப்பதற்கான தேர்தல் திட்டமிடும் கலையில் தலைசிறந்த
வியூகவாதியாக இருந்து வரும் பிரதமர் நரேந்திர மோடி பெரிய அளவிலான தேர்தல் வெற்றியை
எவ்வாறான வியூகங்கள் தனக்குப் பெற்றுத் தரும் என்பதை அறிந்து கொள்வதில் இப்போது மிகுந்த
குழப்பத்தில் இருக்கிறார் என்றே தோன்றுகிறது. தான் பேசும் வார்த்தைகளை மக்களை நம்ப
வைப்பதில் எப்போதும் ஒரு நிபுணராகவே அவர் இருந்து வந்திருக்கிறார். ஆனால் தான்
தொடர்பு கொள்ள நினைக்கும் வாக்காளர்களிடத்தில் இன்றைய நிலைமையில் தன்னுடைய
பேச்சுகள் உறுதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உலகப் புகழ்பெற்ற அந்த
அரசியல்வாதியே அதிகம் நம்பவில்லை என்றே தோன்றுகிறது. தன்னுடைய தகவல்தொடர்பு உத்தி மீது
திருப்தியில்லாத நிலைமையே தற்போது அவரிடம் தென்படுகிறது. அவ்வாறான நிலைமையில் தான்
சென்றடைய நினைக்கும் நபர்களைத் தன்னுடைய பேச்சுகளின் மூலம் திருப்தியடைய வைக்க
முடியும் என்று அவரால் எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது.
2014, 2019
நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மட்டுமல்லாமல், தன்னுடைய முகாமிற்கு
உள்ளே, வெளியே தன்னுடைய அதிகாரத்தை உறுதி செய்து கொள்வதில் அவரிடமிருந்த ஆளுமை
உருவாக அவரிடமிருந்த இந்த திறமையே முக்கிய பங்கை வகித்தது. மோடி-அலை என்று தேசிய
அளவில் தனக்கான பிம்பத்தை உருவாக்கிப் பிரச்சாரம் செய்து வந்த மோடி தனது தகுதி/வகையுடன்
வேறொரு தலைவரே இந்தியாவில் இல்லை என்ற ‘நம்பிக்கையை’ சர்வதேச அளவில் ஊதிப்
பெருக்குவதிலும் வெற்றி பெற்றவராக இருந்தார். சர்வதேச ஊடகங்கள் இதுவரையிலும் அந்த
பிம்பத்தை ஓரளவிற்கு நம்பி வந்திருப்பதாகவே உறுதியாகத் தெரிகிறது. அது மோடிக்கு அந்த
ஊடகங்கள் தொடர்ந்து அளித்து வரும் முக்கியத்துவத்திலிருந்து தெளிவாகத் தெரிய
வருகிறது. அவருக்கு மட்டுமே விரிவான, பிரத்தியேகமான விளம்பரத்தை வழங்குவது என்ற
நிலையை உறுதியாகக் கடைப்பிடித்து வந்த தேசிய அளவிலான ஊடகங்கள் அதுபோன்ற
நிலைமையிலிருந்து இப்போது மறைமுகமாகப் பின்வாங்குவதை வெளிக்காட்டத் தொடங்கியுள்ளன.
இந்த
நிலைமையை தேர்தல் முடிவுகளுடன் இணைத்து ஏற்கனவே சில மட்டங்களில் ஊகங்கள் வெளியாகத்
தொடங்கியுள்ள நிலையில், ஆரம்பநிலையிலேயே மிகவும் அவசரமாக அவ்வாறு ஊகம் கொள்ளத்
தேவையில்லை என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனாலும் சில அடிப்படை உண்மைகளை முழுமையாகப்
புறக்கணிக்கவும் முடியவில்லை. மோடியே தனது கவனத்தில் இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதை
முதலாவதாக எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு அயோத்தி விவகாரத்தில் வெற்றி கிடைத்த
போதிலும், அந்த வெற்றிக்கு மக்கள் மிகப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகத்
தெரியவில்லை. முன்பு போல அடிக்கடி மோடி-அலை போன்ற முழக்கங்களோ, அவர்
நிகழ்த்துகின்ற ‘சாதனைகளுக்காக’ அவரைப் பாராட்டுவது போன்ற சப்தங்களோ எங்கும் எதிரொலிக்கவில்லை.
தற்போது நிலவி வருகின்ற வெப்ப அலை ஓரளவிற்கு அதற்கான காரணமாக இருக்கலாம். மோடியின்
கூற்றுகள், வாய்ச்சவடால்கள், காங்கிரஸுக்கு எதிரான பேச்சுகளை மக்கள் முன்பு போல நம்பவில்லை
என்று கருதுவது நியாயம் என்றே தோன்றுகிறது. நிச்சயம் அவ்வாறு கருதுவதற்கான
சாத்தியங்கள் உள்ளன. இளம் வாக்காளர்கள்,
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் போன்றோருக்கு மோடி அளித்த
வாக்குறுதிகள் மதரீதியாக தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொண்ட அயோத்தி
பிரச்சனையுடன் மட்டுமே நின்று விடவில்லை. அவர் அளித்த வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதற்கு அவரது பத்தாண்டு கால ஆட்சியில்
போதுமான கால அவகாசம் இருந்தது.
வாக்காளர்கள்
முன்பைக் காட்டிலும் இப்போது மிக வலுவாக மோடியின் பத்தாண்டு கால ஆட்சியை மதிப்பிட்டு
வருகின்றனர். சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் அல்லாமல் இப்போது அவரை நாடு
முழுவதும் உள்ள வாக்காளர்கள் மதிப்பீடு செய்கின்றனர். முன்பெல்லாம் மோடி-அலையில்
சிக்கிக் கொண்டிருந்த வாக்காளர்கள் அவர் எதைச் சொன்னாலும் எந்தவொரு ஆலோசனையுமின்றி
அதனை அப்படியே ஏற்றுக் கொண்டனர். மோடியின் குருட்டு பக்தர்களாக கணிசமான
எண்ணிக்கையில் இருந்த அதுபோன்ற வாக்காளர்களாலேயே பாஜகவின் தேர்தல் தலையெழுத்து தீர்மானிக்கப்பட்டது.
இவையனைத்தும் சேர்ந்த பிறகும் ஐம்பது சதவீத வாக்குகளை பாஜக பெறுவதற்குக்கூட அவை
உதவவில்லை என்ற உண்மை ஒருபுறமிருக்க, அந்தக் கட்சியால் வெற்றியை எட்ட முடிந்தது.
மோடி பக்தர்கள்கூட இப்போது முன்பிருந்ததைப் போல மோடி-அலையால் கவரப்பட்டவர்களாக இருப்பதாகத்
தெரியவில்லை. இதுபோன்ற கடினமான யதார்த்தங்களைப் புறக்கணிக்க முடியாத நிலைமையே
இப்போது நிலவி வருகிறது.
மோடி-அலையில்
குறிப்பிடத்தக்க அளவிற்குச் சரிவு ஏற்பட்டுள்ளது. மோடி-அலை பற்றி முன்பு
எழுப்பப்பட்ட பரபரப்பு ஓரளவிற்கு செயற்கையாக உருவாக்கப்பட்டது என்னவோ உண்மைதான். இப்போது
அந்த அலை மீதான சந்தேகமும், அதிலிருந்து ஒதுங்கி நிற்பதும் நடந்து வருகிறது.
சாதாரணமான இந்தியர்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சனைகளின் பின்னணியில் மோடி-அலை
சிறியதாக, அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக இல்லாமலிருப்பதற்கான சாத்தியம் உருவாகியுள்ளது.
அடிமட்டத்தில் மிகவும் மோசமான நிலைமையை மக்கள் எதிர்கொண்டு வருகின்ற நிலையில் மோடி
குறித்த உருவாக்கப்பட்ட பிம்பத்திற்கு எந்தவொரு முக்கியத்துவமும் இப்போது இருக்கவில்லை.
மோடி மற்றும் பிற பாஜக பிரமுகர்கள் முன்வைக்கின்ற காங்கிரஸுக்கு எதிரான மதவாதம்
கலந்த பேச்சுகள் அவர்களுடைய தேர்தல் கவர்ச்சியை அதிகரிப்பதற்கு உதவி செய்யாதது
குறித்து ஆச்சரியப்பட எதுவுமில்லை.
இங்கே
குறிப்பிடப்பட்டிருப்பவை மக்கள் வாக்களிக்கின்ற போக்கில் ஏற்பட்டுள்ள
குறிப்பிடத்தக்க மாற்றங்களை பல வழிகளில் எடுத்துரைக்கின்றன. மோடியும், அவரது
கட்சியும் முன்பு பெற்றதைக் காட்டிலும் அதிகமான வாக்குகளைப் பெறும் வாய்ப்புகள்
வலுவாக இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2014, 2019ஆம் ஆண்டை
ஒப்பிடுகையில் இப்போது பாஜகவிற்கு ஆதரவான வாக்கு வங்கி மிகவும் பலவீனமாக இருக்கிறது
என்றே கூறலாம். ஆனாலும் பாஜகவின் வாய்ப்புகள் முன்பு போல சிறப்பாக இருக்காது, வெற்றி/தோல்வியுற்ற
இடங்களின் எண்ணிக்கை போன்றவை வேறு சில காரணிகளிடமிருந்தும் பிரிக்க முடியாதவை
என்றே தோன்றுகின்றன.
பாஜகவை
ஆதரிக்காதவர்களின் வாக்குகள் யாருக்குச் சாதகமாக மாறும் என்ற கேள்வி அதில்
முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பாஜகவிற்கு எதிரான வாக்குகள் பிரிவது பாஜகவின்
வெற்றிக்கு உதவலாம். அந்த வாக்காளர்களிடமுள்ள பாஜக-விரோத மனப்பான்மை அவர்களின்
முடிவை முதன்மையாகத் தீர்மானிக்கும்
என்றால், அவர்களுடைய அந்த முடிவில் ஒற்றுமை/பிளவு இருக்குமா, இல்லையா என்பது அவர்கள்
யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கும். அத்தகைய போக்கு பாஜகவின் போட்டியாளர்கள் காட்டுகின்ற
ஒற்றுமை, தேர்தல் பலத்தையே வலுவாகச் சார்ந்திருக்கும். பாஜகவின் போட்டியாளர்களுடைய
தேர்தல் பலம் அவர்களுக்குச் சார்பாக/எதிராக வாக்காளர்கள் நகர்வதைப் பொறுத்தே
தீர்மானிக்கப்படும்.
காங்கிரஸ்
மற்றும் பாஜகவின் மற்ற போட்டியாளர்களுடைய பிரச்சாரம், இந்தியா கூட்டணியின்
தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் ஆகியவற்றையும் புறக்கணித்து விட முடியாது. மோடிக்கு
(பாஜக) ஆதரவாக/எதிராகப் பிரச்சாரம் செய்பவர்களின் நேர்மறை/எதிர்மறை தாக்கத்தால்
மட்டுமே முடிவுகள் தீர்மானிக்கப்படப் போவதில்லை. மோடியின் தோல்வி பாஜக எதிர்ப்பாளர்களுடைய
தீவிரமான, ஒன்றுபட்ட தேர்தல் பலத்தைப் பொறுத்தே அமையும். வாக்காளர்கள் தங்கள்
அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதே தேர்தல் முடிவுகளைத்
தீர்மானிப்பதில் முக்கிய பங்குடன் இருக்கும். இறுதி முடிவு மோடியின் போட்டியாளர்களை
நோக்கி வாக்காளர்கள் வலுவாக நகர்கிறார்களா இல்லையா என்பதை மட்டும் பொறுத்ததாக இருக்காது.
அது மூன்றாவது முறையாக மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கான
பதிலைப் பொறுத்ததாகவே இருக்கும்.
வாக்காளர்கள்
ஒருவேளை மோடி மீண்டும் திரும்பவும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினால்,
பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள்
முடிவெடுப்பது குறித்து எந்தவொரு விவாதமும் தேவைப்படாது. ஆனால் மோடி மீண்டும்
மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்றால், எதிர்க்கூட்டணி
மீது உறுதியான, தீர்க்கமான நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும்
முக்கியமானதாக இருக்கும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது தொடர்பாக பாஜகவிற்குள்
ஏற்பட்டுள்ள விரிசல் மோடிக்கு எதிராக மாறலாம் என்றாலும் அத்தகைய நிலைமை குறித்து
வலுவான விவாதங்கள் எதுவும் எழவில்லை. மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதை எதிர்த்து
பாஜகவிற்கு எதிராக வாக்களிப்பதை மௌனமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாக்காளர்களைப்
பற்றியும் இதையே கூறலாம். வாக்காளர்கள் பாஜகவிற்கு
எதிராக வாக்களிப்பது மட்டுமே போதாது - அவர்கள் பாஜகவிற்கு எதிராக கூட்டணியில் உள்ள
வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவரது/அவளுடைய வெற்றியை உறுதி செய்திட முன்வர
வேண்டும்.
இந்தத்
தேர்தல்கள் எண்களின் விளையாட்டாக இருப்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், இந்தச்
சூதாட்டம் உத்திகளைச் சிறப்பாக வகுக்கின்ற முக்கியமானவர்களுக்கும் பெரும் சவாலாகவே
உள்ளது. அடிமட்டத்தில் வாக்காளர்கள் அமைதியாகப் பயன்படுத்தி வரும் உத்திகளே
அதற்குக் காரணமாக இருக்கின்றன. இந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால் தங்களிடமுள்ள
தேர்தல் வலிமையைப் பயன்படுத்தி அதிகாரத்தில் வீற்றிருக்கும் கட்சியின்
வெற்றி/தோல்வியை உறுதி செய்வதற்கு வாக்காளர்கள் மிக வலுவாக, அமைதியாகக் கையாளும்
ஜனநாயக உத்தியின் வெளிப்பாடாகவே 2024ஆம் ஆண்டு தேர்தல்கள் இருக்கப் போகின்றன.
இன்னும் வெளிப்படையாகச் சொல்வதென்றால் - மோடிக்கு ஆதரவாக அல்லது அவருக்கு எதிராக
எத்தனை வாக்குகள் பதிவாகப் போகின்றன என்பதுதான் இந்த தேர்தலில் மிக முக்கியமான
கேள்வியாக இருக்கும்!
https://countercurrents.org/2024/05/modi-challenged-by-silent-strategy-of-indian-voters/
Comments