இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலும்,
தடுப்பூசியால் தூண்டப்படும் நோய் எதிர்ப்பாற்றலும்
இதற்கு முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு தவறான தகவல்களை நம்மிடையே கோவிட்-19 கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. அதன் காரணமாக இதற்கு முன்னர் தகவல்களுடன், நன்கு ஆராயப்பட்ட, பக்கச் சார்பற்ற செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான ஊடகவியலாளர்களின் பொறுப்பு இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபோதும் இருந்திருக்கவில்லை. பாண்டா அமைப்பின் (தொற்றுநோய் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் - PANDA) உறுப்பினரான மார்க் ஜிரார்டோவின் இந்தக் கட்டுரையானது, கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ள உண்மைகளின் மூலத்தை வழங்குகின்ற பல ஹைப்பர்லிங்க் இணைப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் கோவிட்-19 தடுப்பூசி குறித்த்துள்ள பிரச்சனைகளை ஆழமாகக் காட்டுகின்ற வகையிலான இணைப்புகளும், படங்களும் இந்தக் கட்டுரையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இந்தக் கட்டுரையை ‘தடுப்பூசிக்கு எதிரானது’ என்று கருத வேண்டியதில்லை. மாறாக இந்தக் கட்டுரை இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் குறித்த ஆதாரங்களை வழங்குகின்ற வகையில் மட்டுமே இருக்கிறது. நன்கு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டிருக்கும் இந்தக் கட்டுரை வாசிப்பிற்கான முழுத்தகுதியுடன் அமைந்திருக்கிறது. நம்மிடையே இன்னும் வாழ்ந்து வருகின்ற ஒரே தென்னாப்பிரிக்க நோபல் விருது பெற்ற அறிவியலாளரான பேராசிரியர் மைக்கேல் லெவிட் இந்தக் கட்டுரைக்கான ஏற்பை தானாக முன்வந்து அளித்துள்ளார் (கீழே காண்க)
- நத்யா
ஸ்வார்ட்
கோவிட் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவர்களும்
தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமா?
மார்க் ஜிரார்டோ
பாண்டா (தொற்றுநோய் தரவு
மற்றும் பகுப்பாய்வு நிறுவனம்
இந்தக் கேள்விக்கு தொற்றுநோயியல்,
நோயெதிர்ப்பு, மருத்துவ தரவு என்று அனைத்துமே மிகத் தெளிவாக ‘இல்லை!’ என்றே பதில்
கூறுகின்றன. தொற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று
சொல்வதற்கான சிறப்புக் காரணம் எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை.
ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு
இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவராக இருந்த போதிலும் தடுப்பூசி போட்டுக்
கொள்வதென்று கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பிரிட்டிஷ் நண்பர் ஒருவர் முடிவு
செய்தார். சமீபத்தில் அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இது: ‘மார்க், அஸ்ட்ராஜெனிகா
இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டு எட்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை லேசான
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டேன். நான் ஒரு மராத்தான் ஓட்டப்பந்தய வீரன் என்பதால் அது
‘நம்ப முடியாததாகவே’ இருந்தது. நான்
புகைப்பதில்லை. மேலும் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, குடும்பப் பின்னணி
அல்லது ரத்த உறைவை ஏற்படுத்தும் எந்தவொரு ஆபத்தும் எனக்கு இல்லை… இரண்டாவது டோஸ்
எடுத்துக் கொள்வதற்கு எதிராக நீங்கள் என்னை எச்சரித்திருந்தீர்கள். உங்களுடைய
ஆலோசனையை நான் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் முற்றிலும்
தேவையே இல்லாத ஆபத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதைச் செய்தது குறித்து உண்மையில்
இப்போது நான் வருத்தமடைகிறேன்’.
பெரும்பாலானவர்களைப்
போலல்லாமல் டோனி நன்கு தகவல் அறிந்தவராகவே இருந்தார். இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலுக்கு
இருக்கின்ற ஆற்றல், வாழ்நாள் முழுவதும் இல்லாவிட்டாலும் நீண்ட காலத்திற்கு இருக்கக்கூடிய அந்த எதிர்ப்பாற்றல், எந்தவொரு
மருத்துவ நடைமுறையிலும் இருக்கின்ற ஆபத்துகள் (ஆம், தடுப்பூசி என்பது மருத்துவ
நடைமுறைதான்!), தடுப்பூசிகளால் ஏற்படும் பாதகமான நிகழ்வுகள் அதிகரிப்பது குறித்தெல்லாம் அவரிடம்
கூறப்பட்டிருந்தது. தனக்கு இவ்வாறு நேரிடும் என்று தான் நினைத்துப் பார்க்கவேயில்லை
என்று அவர் இப்போது கூறியிருந்தார்…
தடுப்பூசி தொடர்பாக
ஏற்படுகின்ற பாதகமான நிகழ்வுகளின் தீவிரத்தன்மையை முழுமையாக, துல்லியமாக
மதிப்பிடுவது மிகவும் கடினம் என்றாலும் மருந்து நிறுவனங்கள், பிரதான ஊடகங்கள்,
கல்வியாளர்கள், சுகாதார அதிகாரிகள், மருத்துவ சமூகம் என்று பலரும் கூறி வருவதைப்
போல கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி பாதிப்பு எதுவுமில்லாதது என்ற நிலைமை இருக்கவில்லை என்பது மிகவும் தெளிவாகவே உள்ளது. நோயால் இன்னும் பாதிக்கப்படக்
கூடியவர்களாக, அதிக ஆபத்தை எதிர்கொண்டிருப்பவர்களைத் தவிர்த்து விட்டுப்
பார்த்தால், தடுப்பூசியால் ஏற்படக் கூடிய கூடுதல் அபாயங்களை ஏற்றுக் கொள்வதால் நோயால்
ஏற்கனவே பாதிக்கப்பட்டு மீண்டிருப்பவர்களுக்கு கிடைக்கப் போகின்ற உண்மையான பயன்
என்று எதுவும் இருக்கப் போவதில்லை என்பதே உண்மை.
நமது நோயெதிர்ப்பு
மண்டலத்தின் ஆற்றலை மிகவும் குறைவாக மதிப்பிட்டு, இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலை நிராகரித்து கோவிட்-19க்கு எதிரான
நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கிறது என்று பிரதான ஊடகங்கள்,
சுகாதார அதிகாரிகள், ‘வல்லுநர்கள்’ பலரும் கடந்த ஒராண்டிற்கும் மேலாக கூறி
வருகின்றனர். எந்தவொரும் ஆபத்தும் இல்லாத தன்னியல்பான செயல்முறையாக, இந்த நெருக்கடிக்கான ஒரே மாயத்
தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே இருப்பதாக அவர்களால் சித்தரிக்கப்பட்டும் வருகிறது.
ஆனால் வேறுபட்ட நிலைமை நிலவி வருவதையே கிடைத்திருக்கின்ற தரவுகள் நமக்குக்
காட்டுகின்றன. அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்பட்டு வருகின்ற இதுபோன்ற கதைகளுக்கு எதிராக அது தவறான வாதம் என்பதை நாங்கள் நிரூபிப்போம் என்று பலரும்
முன் வந்திருக்கிறார்கள்.
பரிணாம வளர்ச்சியின்
அதிநவீன சாதனைகளில் ஒன்றாகவே நமது மனித நோயெதிர்ப்பு அமைப்பு அமைந்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த அமைப்பைச் சார்ந்தே நமது இனத்தின் உயிர்வாழ்வு இருந்து
வந்திருக்கிறது. இன்றைக்கும் நாம் அந்த அமைப்பையே முழுமையாக நம்பியிருக்கிறோம்.
சார்ஸ்-கோவி-2 நோயால் பாதிக்கப்பட்ட 99% பேர் எவ்விதச் சிகிச்சையுமின்றி
குணமடைந்து விடுவதாக பதிவுகள் காட்டுகின்றன. ஆரம்பகாலத்தில் வீட்டிலேயே
தரப்படுகின்ற சிகிச்சை எதையும் பெற்றிராத சார்ஸ்-கோவி-2 நோயாளிகளில் 1% மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையே வேறு
வார்த்தைகளில் கூறுவதானால், நமது நோயெதிர்ப்பு அமைப்பே நம்மை அதிகப்படியாகப்
பாதுகாத்து வருகிறது. இந்த தடுப்பூசிகளும்கூட நமது நோயெதிர்ப்பு மண்டலத்தையே
முற்றிலுமாகச் சார்ந்துள்ளன. அடிப்படையில் எந்த மாதிரியான வைரஸ் குறிப்பான்கள்
தயாரிக்கப்பட வேண்டும் என்பதை இந்த தடுப்பூசிகள் நமது நோயெதிர்ப்பு அமைப்புகளுக்கு
கற்பிக்கின்றனவே தவிர அந்த தடுப்பூசிகளால் நோயைக் குணப்படுத்திவிட முடியாது. முழுமையாகச்
செயல்படுகின்ற நோயெதிர்ப்பு அமைப்பு இல்லாமல் எந்தவொரு தடுப்பூசியாலும் பயனுள்ளதாக
இருந்திட முடியாது.
நோய்
எதிர்ப்பாற்றல் படிப்படியாகக் குறைந்து விடும் என்ற
தவறான வாதம்
நோய்க்கு எதிராக உருவான
ஆன்டிபாடிகளின் அளவு நோயிலிருந்து குணமடைந்தவுடன் குறைந்து போவதால் நோயெதிர்ப்பு
எதிர்வினையும் குறைகிறது. அவ்வாறு குறைவது மிகவும் இயல்பான செயலாக இருப்பது
மட்டுமல்லாது நமது உடலை இயல்பான, சீரான நிலைக்கு மீட்டெடுப்பதற்கும்
இன்றியமையாததாக உள்ளது. நிரந்தரமாக காய்ச்சல் இருந்து கொண்டே இருப்பது தீங்கை
விளைவிப்பதைப் போல, அதிக எண்ணிக்கையில் இலக்கு எதுவுமில்லாத ஆன்டிபாடிகள் அல்லது
டி-செல்கள் நமது உடலுக்குள் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருப்பது தன் எதிர்ப்பாற்றல் (ஆட்டோ இம்யூன்) நோய்கள்
போன்ற கடுமையான சிக்கல்களை உருவாக்கிவிடக் கூடும். பரிணாம முன்னோக்கைக் கொண்டு
பார்க்கும் போது, நோய்த்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் ஆன்டிபாடிகள், டி-செல்களின்
அளவு குறைந்தவர்கள் மட்டுமே தொற்றுநோயிலிருந்து பிழைத்துள்ளது தெரிய வருகிறது. ஆக
நோயிலிருந்து குணமடைந்த பிறகு ஆன்டிபாடிகள், டி-செல்கள் குறைவது உண்மையில்
ஆரோக்கியமானதாகவும், உடல்நலத்தை உறுதியளிப்பதாகவுமே இருக்கிறது,
நோயிலிருந்து குணமடைந்த
பிறகு இவ்வாறு டி-செல்கள், ஆன்டிபாடிகளின் அளவில் ஏற்படுகின்ற குறைவிற்கு நோய்
எதிர்ப்பாற்றலே இல்லாமல் போய்விட்டது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. புதிய
சூழ்நிலைக்கு ஏற்றதாக காவல் தடுப்பு பயன்முறைக்கு நமது நோயெதிர்ப்பு அமைப்பு மாறியிருக்கிறது
என்பதே அதன் உண்மையான பொருளாகும். நோயிலிருந்து குணமடைந்த பிறகும் பல ஆண்டுகளுக்கு
ரத்தத்தில் சுற்றிக் கொண்டு, திசுக்களில் தங்கியுள்ள நினைவாற்றல் பி- மற்றும்
டி-செல்கள் விழிப்புடன், திறனுள்ள காவல் தடுப்பு வீரர்களாகச் செயல்பட்டு
வருகின்றன.
·
1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றிலிருந்து
தப்பியவர்கள் தொன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸுக்கு
நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டிருப்பது சோதித்து
அறியப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து தப்பியவர்கள் பல்லாண்டுகளுக்குப் பிறகு இன்னும் அந்த
நோய்க்கான எதிர்ப்பாற்றலைக் கொண்டர்களாகவே இருந்தனர்.
·
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகும் வலுவான டி-செல்
எதிர்வினை 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களிடம் இருப்பது
நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.
·
கடந்த கால சாதாரண சளி நோய்த்தொற்றுகளிலிருந்து பெறப்பட்ட
பரவலான உயர் குறுக்கு-நோய் எதிர்ப்பாற்றல் கொரோனா வைரஸுக்கு எதிரான
இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலின் மீளும் தன்மையை மேலும் நிரூபிக்கும் வகையில் இருக்கின்றது.
குறிப்பிட்ட சார்ஸ்-கோவி-2 நோய் எதிர்ப்பாற்றல் வாழ்நாள் முழுவதற்கும் பயனுள்ளதாக இருப்பதையே சமீபத்திய ஆய்வுகள் அனைத்தும் காட்டுகின்றன. நமது நோயெதிர்ப்பு அமைப்பு கூறுநிலைத் தளமாக உள்ளது. பல்வேறு
சூழல்களில் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக எண்ணற்ற வழிகளில் அதனால் செயல்பட
முடியும். எனவே எதிர்கொள்ளும் வைரஸ் அச்சுறுத்தல்களைப் பொறுத்தவரை அது நடுநிலையானதாகவே
இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கோவிட்-19இலிருந்து மீண்டவர்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் தங்களுடைய நோய்
எதிர்ப்பாற்றலை இழந்து விட நேரிடும் என்று நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை.
மறுதொற்று குறித்த தவறான வாதம்
சார்ஸ்-கோவி-2ஆல் ஏற்கனவே
பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்படுவதாக கேள்விப்படுகிறோம். உண்மையில்
இயற்கையான அல்லது தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் பலராலும்
விவரிக்கப்படுவதைப் போல துளைக்க முடியாத முடியாத கவசத்தைப் போன்றிருப்பதில்லை. எனவே
பாதிப்பை ஏற்படுத்தாத, அறிகுறியற்ற மறுதொற்றுகள் ஏற்படவே செய்கின்றன. அதுதான் உண்மையில்
தகவமைப்பு நோய் எதிர்ப்பாற்றல் தூண்டப்படும் வழிமுறையாக உள்ளது. இருப்பினும் அறிகுறியுடனான மறுதொற்றுகள் மிகவும் அரிதானவை. தகவமைப்பு நோய் எதிர்ப்பாற்றல் ராணுவத்தைப் போல
எதிரிகளுடைய ஆற்றலின் அளவு, அதன் முன்னேற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட, விரைவான, இருக்கின்ற
வளத்திற்கேற்ற எதிர்வினையை வழங்குகிறது. மறுதொற்றுகள் பெரும்பாலும்
அறிகுறியற்றவையாகவே இருக்கின்றன. நோயிலிருந்து
மீண்டவர்கள் மறுதொற்றின் மூலம் கடுமையாக நோய்வாய்ப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாகவே
இருக்கிறார்கள்.
தீங்கை ஏற்படுத்தாத இந்த
மறுதொற்றுகள் மக்களிடம் தொடர்ச்சியான நோயெதிர்ப்பு புதுப்பித்தலை உருவாக்கி நேர்மறையான பொதுசுகாதார பாத்திரத்தை
வகிக்கின்றன. உருவாகின்ற புதிய திரிபுகள் மற்றும் வகைகளுக்கு எதிரான தடையற்ற, கூடுதல்
தகவமைப்பிற்கு அவை உதவக்கூடும். பாதிப்பை ஏற்படுத்தாத இயற்கையான நோய்த்தடுப்பு
அரண்களாக குழந்தைகள் செயல்படுவதால், குழந்தைகள் இல்லாத தம்பதிகளைவிட குழந்தைகளுடன்
இருக்கின்ற தம்பதிகள் பெரும்பாலும் அறிகுறியற்றவர்களாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு
காட்டுகிறது. மக்கள்தொகை அதிக அடர்த்தியுடன் உள்ள அனைத்து நாடுகளும் அறிகுறியற்ற
மறுதொற்றுகளைக் கொண்டிருப்பதாலேயே மிகக்
குறைந்த அளவிலே இறப்பு எண்ணிக்கையுடன் இருக்கின்றன. மக்களின் நோய்
எதிர்ப்ப்பாற்றலை அவை தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.
வைரஸ் திரிபுகள் குறித்த தவறான வாதம்
மேலே குறிப்பிட்டுள்ள
குறைந்த எண்ணிக்கையிலான மறுதொற்றுகள் மட்டுமல்லாது, பெறப்பட்ட நோய்
எதிர்ப்பாற்றலிடமிருந்து இதுவரையிலும் உருவாகியுள்ள வைரஸ் திரிபுகளும் தப்பவில்லை
என்பதுவும் பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களால் ஒரு சில
வார்த்தை மாறுபாடுகளுடன் இங்கிலாந்தில் தடையின்றிப் பேசவும், தொடர்பு கொள்ளவும்
முடியும். அதைப் போலவே வைரஸ் திரிபுகள் உருவான போதிலும் இயற்கையான அல்லது
தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் எந்தத் தடையுமின்றியே உள்ளது.
தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பாற்றலைவிட இயற்கையான தடுப்பாற்றல் கூடுதல்
நோயெதிர்ப்புடன் இருக்கலாம். மனித நோயெதிர்ப்பு மண்டலத்தின் நுட்பம் குறித்துள்ள ஏராளமான
சான்றுகள் வைரஸின் மரபணுக்களில் ஏற்படும் சில சிறிய மாற்றங்களால் நோயெதிர்ப்பு
மண்டலத்தின் ஆயுதக் களஞ்சியத்தைத் தவிர்த்துவிட முடியாது என்பதைத் தெளிவாக்கியுள்ளன.
சார்ஸுக்கு முன்பாகவே உலகெங்கிலும்
(கனடா, ஈக்வடார், காபோன், ஜெர்மனி, இந்தியா, சிங்கப்பூர், சுவீடன், இங்கிலாந்து,
அமெரிக்கா, தான்சானியா, சாம்பியா) குறுக்கு-எதிர்வினை டி-செல்கள் மற்றும்
சார்ஸ்-கோவி-2க்கான ஆன்டிபாடிகள் அதிக அளவில் இருந்து வருவதை பல ஆய்வுகள்
நிரூபித்திருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பலரும் பிற கொரோனா
வைரஸ்கள் வழியாக ஏற்கனவே நோய் எதிர்ப்ப்பாற்றலைத் தங்களிடம் கொண்டிருந்தனர். அது
தொற்றுநோய்களின் போது எதிர்பாராத விதமாக நோயின் அறிகுறியற்றவர்கள்
இருப்பதற்கான விளக்கத்தை அளிப்பதாக
இருக்கிறது. பெரிய அளவில் மரபணு வேறுபாடுகள் இருந்தாலும், கடுமையான கோவிட்டைத்
தவிர்ப்பதற்கு தொடர்புடைய கொரோனா வைரஸ்களுக்கு எதிரான முந்தைய நோய் எதிர்ப்பாற்றலே
போதுமானதாக இருக்கிறது என்பதை அது நிரூபிக்கின்றது. ஆகையால் ஏற்கனவே நோயிலிருந்து
மீண்டு வந்தவர்களைப் பொறுத்தமட்டில் வைரஸ் திரிபுகள் கவலையளிக்கும் வகையில் இருக்கவில்லை
என்பது தெளிவாகிறது.
இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலை விட தடுப்பூசியே சிறந்தது
என்ற தவறான வாதம்
இயற்கையான நோய்
எதிர்ப்பாற்றலைவிட தடுப்பூசிகளே சிறந்த பாதுகாப்பை அளிக்கின்றன என்று கூறப்பட்டு
வருவது யதார்த்தத்தை மீறுகின்ற வழியாகவே இருக்கின்றது. நோயைப் பிரதிபலிக்கின்ற
தடுப்பூசியால் அந்த நோயைக் காட்டிலும் எவ்வாறு நோய்த்தடுப்புக்கு அதிகம்
பயனுள்ளதாக இருக்க முடியும்? கோட்பாட்டளவில் தடுப்பூசிகளால் தூண்டப்படுகின்ற நோய்
எதிர்ப்பாற்றலைவிட இயற்கையான நோய் எதிர்ப்பாற்றல் சிறந்தது என்பதை
விளக்குகின்ற பல காரணங்கள் உள்ளன:
குறைவான நோயெதிர்ப்பு இலக்குகள்: வைரஸ் மரபணு
குறியீட்டின் சிறு பகுதியை மட்டுமே (5-10%) எம்ஆர்என்ஏ/டிஎன்ஏ தடுப்பூசிகள்
கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அவை ORF1 அதிக நோயெதிர்ப்பு எபிடோப்களைப் பயன்படுத்துவதில்லை.
நோயெதிர்ப்பு அமைப்பு குறைந்த எண்ணிக்கையிலான டி-செல்களை குறுகிய திறனுக்குள் தேடி
தேர்ந்தெடுப்பதன் விளைவாக குறைந்த செயல்திறன் கொண்ட எதிர்வினையே கிடைக்கிறது. தர்க்கம்: கால்பந்து போட்டிக்கான பல
முக்கிய வீரர்களை உங்கள் அணி இழந்து விடப் போவதாக கற்பனை செய்து பாருங்கள் -
அப்போதும் உங்கள் அணிக்கு வெல்லக்கூடிய
வாய்ப்பு இருக்கவே செய்யும் - ஆனால் அது மிகவும் கடினமானதாக இருக்கும்.
நீண்ட நோயெதிர்ப்பு தூண்டுதல் நேரம்: குறைந்த எண்ணிக்கையிலே
எபிடோப் இலக்குகள் இருப்பது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
தாமதமாகும் என்பதையும் குறிக்கிறது. கோவிட்-19 போரில் வெற்றி பெற அது ஒரு முக்கிய
காரணியாக உள்ளது. பரந்த இலக்கு திறனைப் பொறுத்தே டென்ட்ரிடிக் செல்கள் மற்றும் அடையாளம்
காணக்கூடிய ஆன்டிஜென்களுக்கு இடையில் நிகழும் சந்திப்பின் வேகம் இருக்கும். தர்க்கம்: உங்களுடைய ஒரேயொரு நண்பர் நீங்கள்
கலந்து கொள்ளும் விருந்தில் இருப்பதைக்
காட்டிலும் கூடுதலாக பத்து நண்பர்கள் அங்கே இருக்கும் போது, உங்களால் ஏதாவதொரு நண்பரை மிக
வேகமாகக் கண்டு கொள்ள முடியும். அதிக எண்ணிக்கையில் நண்பர்கள் இருந்தால் உங்கள் நண்பரைக்
கண்டுபிடிப்பது மிகவும் எளிதாகவே இருக்கும்.
பொருத்தமற்ற இடத்தில் செலுத்தப்படும் தடுப்பூசி: தசைகளுக்கூடாக
செலுத்தப்படுகின்ற தற்போதைய தடுப்பூசிகள் துரதிர்ஷ்டவசமாக வைரஸ் ஊடுருவல், பரவலைப்
பிரதிபலிக்கவில்லை. கொரோனா வைரஸ்கள் தசைகள் வழியாக நமது உடலுக்குள் நுழைவதில்லை. அவை
சுவாசக் குழாய் வழியாகவே உடலுக்குள் சென்று ஒவ்வொரு செல்லாகப் பாதிக்கின்றன.
தசைகளுக்கூடாக வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கு மாறாக, இயற்கையான நோய்
எதிர்ப்பாற்றல் நினைவு உறைவிட செல்கள் நுழைவு தளங்களில் வலுவான காவல் பாதுகாப்பாற்றலை வைத்திருப்பதால் வைரஸிற்கான
நுழைவாயிலை அவை முன்கூட்டியே மூடி விடுகின்றன. பரிணாம நிலைப்பாட்டில் இது சரியான
பொருளையே தருகிறது. தர்க்கம்:
நார்மண்டியின் கடற்கரைகளில் வருகின்ற ராணுவத்தைக் காட்டிலும் குறுகிய
பள்ளத்தாக்கில் வருகின்ற ராணுவத்தைத் தடுத்து நிறுத்துவது மிகவும் எளிதானது.
சமீபத்திய ஆய்வு இந்த
தர்க்கத்தை உறுதிப்படுத்துகிறது. இஸ்ரேலில் நடந்த ஒப்பீட்டு ஆய்வில் மோசமான கோவிட் நோய் பாதிப்பிலிருந்து கிடைத்த
பாதுகாப்பின் அளவு கோவிட்-19இலிருந்து மீண்டவர்களுக்கு 96.4% ஆகவும், தடுப்பூசி
போட்டுக் கொண்டவர்களுக்கு 94.4% ஆகவும் இருந்தது என்று கண்டறியப்பட்டிள்ளது. அந்த
ஆய்வில் ‘ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதன்
அவசியத்தை இந்த முடிவு கேள்விக்குள்ளாக்கி இருக்கின்றது’ என்ற முடிவு
எட்டப்பட்டது. தடுப்பூசியால் தூண்டப்பட்ட எதிர்ப்பாற்றலில் இருப்பதைக் காட்டிலும்
நோயிலிருந்து மீண்டவர்களிடமிருந்த நோய்
எதிர்ப்பாற்றலில் இருந்த ஹுமோரல் மற்றும் சைட்டோடாக்ஸிக் எதிர்வினைகள் வேகமாக,
பரந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தன என்று நியூயார்க்
பல்கலைக்கழகத்தில் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு குறிப்பு ஒப்பீட்டு ஆய்வு எடுத்துக்
காட்டியிருக்கிறது.
கோவிட்டிலிருந்து
மீண்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது எந்தவொரு நன்மையையும் அளிக்காது என்பதற்கு
ஏராளமான சான்றுகள் உள்ளன. மாறாக வைரஸின் கூறுகளுக்கு எதிரான சகிப்புத்தன்மையை
வளர்க்கின்ற ஆபத்து குறைவான நோயெதிர்ப்பாற்றலாக அது இருக்கும் என்பதால் எதிர்மாறான
விளைவுகள் இருக்கலாம்.
தடுப்பூசி தீங்கற்றது என்ற தவறான வாதம்
தடுப்பூசிகள் நவீன
மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு அளித்திருக்கும் மிகப்பெரிய பங்களிப்பைக்
குறைத்து மதிப்பிடாமல், மருத்துவ நடைமுறையாக அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசிகளை ஒருபோதும் லேசாக கருதி விடக்கூடாது. கோடிக்கணக்கான மக்களுக்குச்
செலுத்தப்படும்போது அவை நடுநிலையானவையாகவோ அல்லது பயனற்றவையாகவோ இருப்பதில்லை.
தங்களுடைய இயல்பிலேயே,
ஒருவரின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிநவீன சமநிலையை செம்மைப்படுத்த முயல்வதாகவே
தடுப்பூசிகள் இருக்கின்றன. அதனாலேயே கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைக்
கடைப்பிடிக்கக் கோருவதாக அவை இருக்கின்றன. நோயெதிர்ப்பு பற்றிய புரிதலில் நாம்
கணிசமான முன்னேற்றத்தை அடைந்திருந்த போதிலும், அதன் சிக்கல்களையும்,
நுணுக்கங்களையும் புரிந்து கொள்வதில் குறிப்பாக புதிய எம்ஆர்என்ஏ மற்றும் டிஎன்ஏ
தொழில்நுட்பங்கள் என்று வரும்போது நாம் இன்னும் வெகு தொலைவிலேயே இருக்கின்றோம்.
கடும் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற அதிர்ச்சி,
தன் எதிர்ப்பாற்றல் நோய்கள், எதிர்பாராத இடைவினைகள், வடிவமைப்பு குறைபாடுகள்,
குறைவான தர நெறிமுறைகள், கூடுதல் அளவு போன்ற பல ஆபத்துகள் காரணமாக - தடுப்பூசிகள்
கண்டிப்பான முறையில் பாரம்பரியமாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
செயலிழக்கச் செய்யப்பட்ட
போலியோ தடுப்பூசிகளால் 1955ஆம் ஆண்டில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட 40,000 குழந்தைகள் துவங்கி 1976ஆம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியால்
குய்லின்-பார் நோய்க்குறி உருவான 450 பேர், மிக சமீபத்தில் சூடானில் தடுப்பூசியால் தூண்டப்பட்ட போலியோ பரவல் வரையிலும்
பார்க்கும் போது தடுப்பூசிகளிடம் கவனமாக இருக்குமாறு நமக்கு வரலாறு
கற்பித்திருப்பது தெரிய வரும். சமீபத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின்
தடுப்பூசி பிரேசில் நாட்டு சுகாதார அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அது பொதுச்சுகாதாரத்திற்கு இடையூறு விளைவிக்காமல்,
தடுப்பூசிகளை ஊக்குவிக்க வேண்டுமானால் நமது சுகாதார அதிகாரிகள் எந்த அளவிற்கு
கடுமையாக, சுதந்திரமாக இயங்க வேண்டும் என்பதற்கான தெளிவான நினைவூட்டலாகவே அமைந்திருந்தது.
ஓராண்டு கால ஆய்வுகள்
மற்றும் தடுப்பூசி போட ஆரம்பித்து ஆறு மாத காலம் ஆன பிறகு தடுப்பூசி
போடவிருப்பவர்களையும், சுகாதார அதிகாரிகளையும் பல சிவப்பு சமிக்ஞைகள்
எச்சரிப்பவையாக இருக்கின்றன:
1. அலையும் நானோ துகள்கள்: எம்ஆர்என்ஏவின் கேரியர்களான கொழுப்பு (லிப்பிட்)
நானோ துகள்கள் தசையில் இருக்க வேண்டும்
என்றாலும் அவை உடல் முழுவதும் குறிப்பாக கருப்பைகள், கல்லீரல், எலும்பு மஜ்ஜையிலும் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
2. ஒவ்வாமை ஏற்படுத்தும் பாலிஎத்திலின் கிளைக்கால் (PEG): ஒட்டுத்தன்மை ஊக்கியான PEGஇன் பயன்பாடு குறித்து பல
கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இரண்டாவது டோஸ்
மூலம் இதய ஒவ்வாமை ஆபத்தை அது உருவாக்கியிருப்பதாக முந்தைய ஆய்வுகள்
தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
3. உணர்திறன் வாய்ந்த இடங்கள்: ஸ்பைக் புரதத்துடன் பிணையக்கூடிய ஏஸ்-2
(ACE-2) ஏற்பிகள் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க
அமைப்புகள் போன்ற அதிக உணர்திறன் கொண்ட பகுதிகளின் உள்படலச் (எண்டோதீலியல்)
செல்களில் அதிகம் வெளிப்படுத்தப்படுகின்றன.
4. சுற்றுகின்ற நச்சு ஸ்பைக் புரதங்கள்: ஸ்டெஃபிளோகாக்கல் என்டோரோடாக்சின் பி உடன் ஸ்பைக் வரிசை
கொண்டிருக்கும் ஒற்றுமை காரணமாக எம்ஆர்என்ஏ/டிஎன்ஏ தடுப்பூசிகளால் தூண்டப்பட்ட ஸ்பைக் புரதங்கள் பாதிப்பை ஏற்படுத்துபவையாக, அதிக அழற்சி கொண்டவையாக
இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அவை ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளைச் செயல்படுத்துவதன் மூலம் ரத்த உறைவுகளை ஏற்படுத்துகின்றன என்று நேரடியாகவும்
கண்டறியப்பட்டுள்ளது. ‘வைரஸ் இல்லாமலேயே சார்ஸ்-கோவி-2 ஸ்பைக் புரதம் மட்டுமே நுரையீரலில் அழற்சியை ஏற்படுத்துவதாக எங்கள்
கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன’ என்று ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
5. ரத்த-மூளைத் தடை (பிபிபி) சீர்குலைவு: மூளையைப் பாதுகாப்பதற்கான
அடிப்படை வடிகட்டி பொறிமுறையாக இருக்கின்ற ரத்த-மூளைத் தடையை (பிபிபி) சீர்குலைக்கும்
அபாயம் இருப்பதை சமீபத்திய ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. ஸ்பைக் புரதம் இந்த பிபிபியைக் கடந்து மூளையில் அழற்சியை உருவாக்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.
6. அதிக பாதகமான நிகழ்வுகள்: பெரும்பாலும் குறைவாகவே செய்திகள் வெளியாகியிருந்தாலும், ஒட்டுமொத்தத்தில்
பாரம்பரிய தடுப்பூசிகளால் ஏற்பட்டிருக்கின்ற பாதகமான நிகழ்வுகளின் எண்ணிக்கை மிக
அதிகமாகவே உள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் அமெரிக்காவில் தடுப்பூசி தொடர்பாக
ஏற்பட்டுள்ள அனைத்து இறப்புகளையும் மீறுகின்ற அளவிலே ஆறு மாதங்களில் ஆறாயிரத்திற்கும்
மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இது மிகவும் கவலையளிப்பதாக இருப்பதோடு மேற்கூறப்பட்டிருக்கும்
ஆபத்துகளை உறுதிப்படுத்தவும் முனைகிறது.
7. அதிக ஆபத்தில் உள்ள குழந்தைகள்: குறிப்பாக மாரடைப்பு நிகழ்வுகள்
அதிகரிப்பதன் மூலம், குழந்தைகள், பதின்ம வயதினருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் மிகவும்
தீங்கு விளைவிப்பதாகவே தோன்றுகின்றன. நானோ துகள்கள், ஸ்பைக் நச்சுத்தன்மையைக்
கண்டுபிடித்திருப்பதைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது உடல் எடைக்குத்
தகுந்தவாறு தடுப்பூசிகளின் அளவுகள் சரிசெய்யப்படவில்லை என்பதுவே காரணமாக
இருக்கின்றது.
அடிப்படையில் இவை தடுப்பூசிகளின்
குறுகிய கால விளைவுகளாக மட்டுமே இருக்கின்றன. இந்த தடுப்பூசிகளின் தாக்கங்கள்
குறித்த குறிப்பாக தன் எதிர்ப்பு ஆன்டிபாடிகள் (ஒருவரின் சொந்த உடலையே
குறிவைக்கும் ஆன்டிபாடிகள் தன் எதிர்ப்பாற்றல் நோய்களை உருவாக்கும்) குறித்த
நீண்டகால மருத்துவத் தரவுகள் எதுவுமில்லை,
முடிவாக
கோவிட்-19இலிருந்து ஆரோக்கியமாக, மீண்டிருக்கும் எவரொருவரும் தடுப்பூசி போடுவதில்
உள்ள எந்தவொரு ஆபத்தையும் - அது மிக அரிது என்ற போதிலும் - எதற்காக
விரும்புவார்கள் அல்லது ஏன் அவ்வாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றே நாங்கள்
கேள்வி எழுப்புகிறோம்:
·
கோவிட்-19இலிருந்து மீண்டவர்கள் வலுவான நோய்
எதிர்ப்பாற்றலுடன் இருக்கிறார்கள்;
·
இயற்கை நோய் எதிர்ப்பாற்றல் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்
- அநேகமாக வாழ்நாள் முழுமைக்கும்;
·
தடுப்பூசியால் தூண்டப்படுகின்ற எதிர்ப்பாற்றலைக்
காட்டிலும் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலே சிறந்தது;
·
வைரஸ் திரிபுகள் குறித்த நோயெதிர்ப்பு ரீதியான கவலை
தேவையில்லை, அவை நோயெதிர்ப்பாற்றலிலிருந்து தப்பிக்கும் அபாயத்தை முன்வைக்கவில்லை;
·
தடுப்பூசிகள் என்ற மருத்துவத் தலையீடுகளை ஒருபோதும்
- குறிப்பாக அவை இன்னும் பரிசோதனையில் இருக்கும் போது - லேசாக எடுத்துக்
கொள்ளக்கூடாது,;
·
கோவிட்-19இலிருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசியால்
எந்தவொரு நன்மையும் இல்லை;
·
ஆரம்பத்தில் தடுப்பூசி உற்பத்தியாளர்களால்
கூறப்பட்ட அளவுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவையாக இருக்கவில்லை.
Comments