மோடி ஆட்சியில் மொபைல் தொலைபேசிகள் மக்களின் வெளிப்பாட்டிற்கான, அரசின் ஒடுக்குமுறைக்கான தளமாக இருக்கின்றன
சௌமஸ்ரீ சர்க்கார்
தி
வயர் இணைய இதழ்
ரஜோரியில்
உள்ள ஜம்மு, ,காஷ்மீர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின்
அறுவைச்சிகிச்சை அரங்கில் தொழில்நுட்ப வல்லுநரான சஃபியா மஜீத் 2021 அக்டோபர் மாதம்
தனது மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்தி தன்னைச் சுற்றிலும் லட்சக்கணக்கானவர்கள்
அன்றாட வழக்கமாகச் செய்து வரும் வாட்ஸ்ஆப் ‘நிலை’ப் பதிவேற்றத்தைச் செய்து
முடித்தார். சில நாட்களிலேயே அந்தப் பெண்மணி தன்னுடைய வேலையை இழக்க நேரிட்டது. அவரது
மேலதிகாரி ‘இது போன்ற நடத்தை ஊழியர்கள் எவரிடமும் பொறுத்துக் கொள்ளப்படாது’ என்று செய்தியாளர்
கூட்டத்தில் அறிவித்தார். தன்னுடைய தொலைபேசியில் மஜீத் அப்போது செய்த காரியம் - டி20
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடியது மட்டுமே! .
மொபைல்
தொலைபேசிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத்திற்கு போர் ஒன்றுதான் வழிவகுத்துக்
கொடுத்தது. இன்றைக்கு செல்லுலார் தொழில்நுட்பம் ஒரு நூற்றாண்டை எட்டப் போகின்ற
இந்த தருணம் வெற்றியாளர்கள் யாரும் இல்லாத போரைத் தொடங்குவதற்கு ஒவ்வொரு தொலைபேசியும்
பயன்படுத்தப்படலாம் என்ற நிலைக்கே வந்து சேர்ந்துள்ளது.
கடந்த
பத்து ஆண்டுகளில் ஒருவரது வேலை துவங்கி, விளையாடுவது மற்றும் செய்திகள், அரசு திட்டங்கள்,
வெறுப்பு பேச்சுகளைப் பெறுவது என்று பல வழிகளை தொலைபேசிகள் ஏற்படுத்திக்
கொடுத்துள்ளன. சொத்தின் மீது ஒருவரது விருப்பத்தை வெளிப்படுத்தும் நிலையிலிருந்து தொலைபேசிகள்
மிகவும் அவசியமான தேவை என்ற நிலையை இப்போது அடைந்துள்ளன. காரியங்களைச் செய்து
முடிப்பதற்குத் தேவையான, அறிவியலில் மிகவும் அசாதாரணமான கண்டுபிடிப்புகளை வழங்கி
வருகின்ற மொபைல் தொலைபேசிகள் கருத்துச் சுதந்திரத்தின் பலன்களை உங்கள் வீட்டு
வாசலுக்கே கொண்டு வந்து தருவது மட்டுமல்லாது, அதற்காக உங்களுக்கு அபராதம்
விதிக்கப்படுவதற்கும் என்று இந்தியாவில் பயன்பட்டு வருகின்றன.
தேர்தல் ஆரம்பித்திருக்கும் நிலைமையில் தொலைபேசிகளின் ஆற்றலை எவராலும் மறுத்து ஒதுக்கி விட முடியாது. மொபைலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அரசியல் பிரச்சாரங்கள் துவங்கி, தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை மீறும் செய்திகள் குறித்து எக்ஸ் தளத்தில் வெளியாகின்ற சமீபத்திய தகவல்கள் வரை நம்மால் தொலைபேசிகள் இல்லாத அரசியலை நினைத்துப் பார்க்கவே முடியாத நிலை இப்போது உருவாகியுள்ளது. இதனை வாக்குறுதிகளால் நிரம்பி வழிந்த பிரச்சாரங்கள், தொலைபேசிகள் சென்று சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் இரண்டு முறை ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியைப் போல வேறு யாரும் நன்றாக அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. 2024ஆம் ஆண்டிற்கு வருவோம். இந்தியர்களின் வாழ்க்கைக்குள் இப்போது மோடி வகையறாவினர் நுழைவதற்கான மிக முக்கிய புள்ளியாக தொலைபேசிகள் இருந்து வருகின்றன.
தொலைபேசிக்குள் இருக்கும் அரசு
தொலைபேசிகள்
தரவுகளுக்கான முக்கிய ஆதாரமாக இருந்து வரும் நிலையில், தரவுகளைப் பாதுகாத்து வைப்பதற்கான
சட்டங்களின் போதாமைக்கு எதிராக முணுமுணுத்து வருகின்ற மிகச் சிறிய பிரிவினர் டிஜிலாக்கர்,
டிஜியாத்ரா போன்ற அரசின் முயற்சிகள் கட்டாயமாக்கப்படுவதைக் குறைகூறுகின்றனர்.
இஸ்ரேலிய
உளவு மென்பொருளான பெகாசஸ் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள்,
வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாக மோடி அரசு மீது
குற்றம் சுமத்தப்பட்டு, உலகளாவிய செய்திகளில் இடம் பிடித்த அந்த நிகழ்விற்கான சாத்தியம்
இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. இலக்கு வைக்கப்பட்ட ஒருவரின் ஒட்டுமொத்த
தொலைபேசியை, அதனைக் கொண்டு அவர் செய்து வந்த செயல்பாடுகள் அனைத்தையும் அந்த உளவு
மென்பொருள் எவ்வாறு அணுகியது என்பது குறித்த செய்திகளை வெளியிட்ட செய்தி நிறுவனங்களின்
உலகளாவிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாக வயர் இணைய இதழ் இருந்தது. அந்த உளவு
மென்பொருளை விற்று வரும் NSO குழுமம் ‘பரிசோதிக்கப்பட்ட’ அரசுகளுக்கு மட்டுமே அதனை
விற்பதாகக் கூறுகிறது. இந்திய அரசு ‘தேசிய பாதுகாப்பை’ மேற்கோள் காட்டி அனைத்து
தகவல்களையும் வெளிப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மறுத்தது.
அரசு
மெத்தனமாக இருந்தபோதிலும், தொலைபேசிகள் என்று வரும்போது அதனுடைய அணுகுமுறைகள் வெளிப்படையாகவே இருந்தன. சிறையில்
அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின்
கடவுச்சொல்-பாதுகாக்கப்பட்ட தொலைபேசியைப் பார்வையிட அமலாக்கத்துறை இயக்குநரகம்
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை நாடியபோது அந்தக் கோரிக்கை நிராகரிப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டுகளின்
தன்மையைச் சற்றும் பொருட்படுத்தாமல் சாதனங்களை, முக்கியமாக தொலைபேசிகளைக் கையகப்படுத்துகின்ற
செயல் சட்ட அமலாக்கத்திற்காக இந்த அரசு அதிகம் விரும்பிய தந்திரமாகவே இருந்துள்ளது.
தி வயர் இணைய இதழின் பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் மீது எழுந்த அவதூறு புகாரைத்
தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் அவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2023ஆம் ஆண்டு அதிகாலை
வேளையில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் காவல்துறையினர் -
குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தாமலேயே - நியூஸ்க்ளிக் இணையதளத்தைச் சார்ந்த
தொன்னூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், ஊழியர்களுக்குச் சொந்தமான
இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட தொலைபேசிகள், மடிக்கணினிகளைப் பறிமுதல் செய்தனர்.
பத்திரிகையாளர்களுக்கு
எதிராக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு
வந்துள்ளதன் மூலம், பத்திரிகைத்துறை ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கும் தெளிவான உண்மையைக்
வெளிக் கொண்டு வந்ததற்காக நம் அனைவரின் பைகளிலும் இடம் பெற்றிருக்கும்
தொலைபேசிகளுக்கே நன்றி சொல்ல வேண்டும். நியாயமற்ற செயல்களைப் பதிவு செய்யும் திறனுடன்
உள்ள தொலைபேசிகள் தங்களை வைத்திருப்பவர்களைப் பத்திரிகையாளர்களாக மாற்றியமைத்துள்ளன.
வழக்கமான ஊடகங்களால் தொடர்ந்து புறக்கணிப்பிற்கு உள்ளாகி வரும் சிறுபான்மையினர்,
தலித் குழுக்கள், பெண்கள், பழங்குடிச் சமூகங்கள், ஏழைகள் உள்ளிட்ட சமூகத்தினர்
மீது கவனம் விழுகின்ற வகையில் எவ்விதத் தடையுமின்றி அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாவதற்கான
வழியை சமூக ஊடகங்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளன.
முக்கிய
ஊடகங்கள் எதுவும் செய்யாது இருந்து வரும் சூழலில் செய்திகளைப் பரப்புவதற்கு சமூக ஊடகங்களே அதிகம் உதவுகின்றன. இருப்பினும் அவை
தவறான தகவல்கள் மட்டுமல்லாது, பொய்யான தகவல்கள் அடிக்கடி வெளியாகவும் களம்
அமைத்துக் கொடுத்திருக்கின்றன. பொய்யான தகவல்களைப் பரப்புவதில் வாட்ஸ்ஆப்
முதலிடத்தில் உள்ளது.
நமது தொலைபேசிக்குள் உறைந்திருக்கும்
குற்றம்
மிக
மோசமான அநீதிகளைப் பதிவு செய்யும் போதிலும் குற்றங்களின் மிருகத்தனம் மீது கவனத்தை
ஈர்ப்பதாக தொலைபேசிகள் இருக்கவில்லை.
கடந்த
பத்து ஆண்டுகளில் தங்களால் பாதுகாக்கப்பட்ட மாடுகளைக் காட்டிலும் அதிக
எண்ணிக்கையிலான மக்களைக் கொலை செய்த, காயப்படுத்திய ‘பசு பாதுகாவலர்கள்’ போன்ற
குற்றவாளிகளும் தங்கள் தொலைபேசிகளில் வீடியோக்களைப் பதிவு செய்கின்ற திறமையுடன்
இருப்பதை நம்மால் காண முடிந்துள்ளது. முஸ்லீம்கள், தலித் ஆண்கள் சித்திரவதை
செய்யப்படுவதைப் படம் பிடித்துக் காட்டும் வீடியோக்கள் மோனு மானேசர் போன்றவர்களைப்
பொருத்தவரை மிக முக்கியமான, அதிகாரத்தை அடைவதற்கான அடையாள அட்டைகளாகியுள்ளன.
தொலைபேசியில்
பதிவு செய்யப்பட்ட வீடியோக்களே மணிப்பூர் காங்போக்பி மாவட்டத்தில் நிர்வாணமாக
அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை வெளிக் கொணார்ந்தன.
பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்தைக் காட்டுகின்ற, ஹசன் தொகுதி எம்பியான
பிரஜ்வால் ரேவன்னாவால் மற்றும் அவரது உத்தரவின் பேரில் படம் பிடிக்கப்பட்ட
ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பற்றி சமீபத்தில் செய்திகள் வெளியாகின. கோபம் உச்சத்தை எட்டுகின்ற
வரையிலும் அவரைப் போன்றவர்கள் அனைவரும் சட்டத்தின் நடவடிக்கைகளிலிருந்து மிக
எளிதாகத் தப்பித்துக் கொள்கின்றனர்.
தடைசெய்யும்
தகவல் தொழில்நுட்ப விதிகள், இணையத்தில் அரசிற்கெதிரான செய்திகளை வெளியிடும்
எவரையும் தட்டி வைக்கின்ற அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பாளர்கள் மற்றும்
மறைமுகமாக மேற்கொள்ளப்படும் பேரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் சமூக ஊடக ஜாம்பவான்கள்
மீதான கட்டுப்பாட்டை மோடி அரசு மிக எளிதாகக் கடைப்பிடித்து வருகின்ற போதிலும், தொலைபேசிகள்
நவீன இந்தியர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான மறுக்க முடியாத வெளிகளாக இருந்து
வருவதை மறுப்பதற்கில்லை.
சீனாவின்
தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக டிக்டாக் செயலியை மோடி அரசு தடை செய்தது. அவ்வாறு
விதிக்கப்பட்ட தடை வீட்டிற்குள்ளேயே இருக்கும் பெண்கள், கிராமப்புற இந்தியர்கள்
மற்றும் ஏழைகள் என்று ஒதுக்கப்பட்ட மக்கள் மீது மிக மோசமான அடியாக விழுந்தது.
அதற்கு
மாற்றாக கொண்டு வரப்பட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட் போன்றவை நமது
கவனத்தை பதினைந்து வினாடி இடைவெளிகள் என்ற அளவிற்குக் குறைத்துள்ளன. ஆனாலும் இதுவரையிலும்
புறக்கணிக்கப்பட்ட இந்தியாவின் சில பகுதிகளில் உள்ள கலை, அரசியல், கலைத்திறன்,
திறமை மற்றும் வர்ணனைக்கான உலகங்களை அவை நமக்கு முன்பாக விரித்துக் காட்டியுள்ளன.
இணையவெளியில்
நமக்குப் பழக்கமாகியுள்ள உலகங்களுடன் தொடர்ந்து நம்மை இணைத்து வைத்து வருகின்ற
அல்காரிதம்கள் சற்று மாறுபட்ட பார்வைகள், வாழ்க்கைக்கு
சகிப்புத்தன்மையற்றவர்களாக நம்மை
மாற்றியமைத்துள்ளன. 2025ஆம் ஆண்டில் முப்பது கோடி டாலரைத் தொடும் அளவிற்கு வேகமாக
வளர்ந்துள்ள செல்வாக்கை உருவாக்கித் தருவதற்கான இந்தியச் சந்தை தேர்தல்களில்
செல்வாக்கு செலுத்துகின்ற திறனை உறுதியாகக் கொண்டுள்ளது. வெறுப்பைச் சுமந்து வரும்
வாகனங்களாக ரீல்ஸ் இருப்பதை நம்மால் காண முடிகிறது.
தொலைபேசி இல்லாத உலகம்
அலுவலகம்
மூடப்பட்டாலும் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அலுவலகத்திற்கு
வெளியே தனி தொலைபேசிப் பெட்டி ஒன்றை வைக்க வேண்டும் என்று சுதந்திரத்திற்கு சற்று
முன்பாக சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மக்களுக்கு காந்தி உத்தரவு பிறப்பித்தார்.
இன்றைக்கு ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் ஒரு தொலைபேசிப் பெட்டி இருந்து வரும் நிலையில்,
மக்களுக்கும் அரசிற்கும் இடையில் பாலங்களைக் கட்டமைத்து தொடர்பைப் பலப்படுத்தும்
பொறுப்பில் உள்ளவர்களுக்கும்கூட ஆளுகைக்கான அணுகல் மிகக் கடினமான காரியமாகவே இருப்பது
நிரூபிக்கப்பட்டுள்ளது.
மோடி
அரசு ஸ்மார்ட்போன் ஏறக்குறைய இந்தியா முழுக்க இருப்பதாகக் கூறிக் கொள்ள விரும்புகிறது. அதற்காகவே அரசு சேவைகளைப்
பெறுவதற்கு தொலைபேசிகளைச் சார்ந்த நிபந்தனைகளை அந்த அரசு உருவாக்கியிருக்கிறது.
பணமதிப்பு
நீக்கம், அதிக அளவிலான டிஜிட்டல் உந்துதலுக்குப் பிறகு இப்போது டெபிட் கார்டுகளை
மாற்றியமைக்கின்ற பாதையில் தொலைபேசிகள் பயணிக்கின்றன. தங்களுடைய விளைபொருட்களை
அரசு வாங்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காகப் பதிவு செய்து கொள்ள விரும்பும்
விவசாயிகள் துவங்கி தங்களுடைய மாத ஊதியத்தை உறுதி செய்து கொள்வதற்காக ஊட்டச்சத்து
கண்காணிப்பு (போஷன் டிராக்கர்) செயலியில் விவரங்களைப் பதிவு செய்கின்ற அங்கன்வாடித்
தொழிலாளர்கள் மற்றும் உள்ளூரில் போடப்படும் தடுப்பூசி குறித்த பதிவுகளைத் தாக்கல்
செய்யும் ஆஷா தொழிலாளர்கள் வரையிலும் என்று இந்த நாட்டின் பெரும்பாலான செயல்பாடுகள்
ஸ்மார்ட்போன்களை நம்பியே இருக்கின்றன.
இவையனைத்தும் பயனுள்லவையாக இருப்பதாகத் தோன்றினாலும், நாட்டில் மிகக் குறைவான அளவிலே (2021ஆம் ஆண்டு நிலவரப்படி மக்கள் தொகையில் 46.3 சதவிகிதம்) இணையத்தின் ஊடுருவல் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் போது அவை போதுமானதாக இருக்கவில்லை என்பது தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்வைத்து ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய இந்த அரசு அதற்கு முரண்பாடாக தற்போது ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ஒதுக்கீட்டை மிகவும் கேலிக்கூத்தாக ஒதுக்கியிருக்கும் நிலையில், மக்களுக்குப் போதுமான இணையதள வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திடாமல் அன்றாட நிர்வாகத்தை இணைய வழியில் அதிகப்படுத்துவது மிகவும் அசாதாரணமான, கொடூரமான காரியமாகவே இருக்கிறது. ஆக தற்போதைய நிலையில் ஆஷா தொழிலாளர்கள் தாங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய செயலிகளைக் கண்டறிந்து கொண்டு, தங்கள் நடமாட்டங்களைப் பதிவு செய்து வருகின்றனர். தங்களுடைய அற்பமான ஊதியத்தைப் பெறுவதற்காக ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்ற, குழப்பமான தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு அங்கன்வாடித் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
வன்முறைகளைக்
கையாளும் போது (மணிப்பூரைப் போல) இணையவழிச் சேவைகளை நிறுத்திக் கொள்வதை அல்லது
அதற்கான சாத்தியத்தையே (கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜம்மு மற்றும் காஷ்மீரில்,
2019இல் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்படுவதற்கு முன்னும், பின்னும்) முதல்
நடவடிக்கையாக மேற்கொண்டு வருவதால் இந்தியா இந்த உலகில் இணைய முடக்கத்திற்கான
தலைநகரமாகவே இருந்து வருகிறது.
கிக்
பொருளாதாரத்தில் இந்தியாவில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு சிறிய
அளவில் இருக்கின்ற வாழ்வாதாரத்திற்கான ஆதாரத்தையும் இத்தகைய சேவை நிறுத்தங்கள்
பாதிக்கின்றன. அறிவியல் புனைகதைகளைப் போல உணவு, மருந்துகள், சேவைகள், மளிகைப்
பொருட்கள் ஒரு பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் நேராக நமது வீடுகளுக்கு வந்து
சேருகின்றன. மனிதர்களுக்குச் சாத்தியமில்லாத டெலிவரி நேரங்களை அதுபோன்ற சேவைகள் உறுதியளிப்பதன்
மூலம் பல சாலை விபத்துகள் நேர்ந்துள்ளன. நாம் இந்த சேவையில் ஈடுபடும் மனிதர்களிடம்
மனிதாபிமானமற்றவர்களாக நடந்து கொள்ளவே அது வழிவகுத்துக் கொடுத்துள்ளது. தங்களுக்கு
ஒதுக்கப்பட்ட டெலிவரிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத போது ஸ்விக்கி போன்ற
செயலிகள் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உடல்நலத்திற்கான காப்பீட்டை விலக்கிக்
கொள்வதற்கும் அது வழிவகை செய்துள்ளது.
மக்கள்
அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாட்டிற்குப் பிரதான ஊன்றுகோலாக நரேந்திர மோடியின்
பத்தாண்டு கால ஆட்சியில் தொலைபேசிகள் இருந்து வருகின்றன. இந்த வேகமான டிஜிட்டல்
வாழ்க்கை நம்முடைய தனிப்பட்ட நினைவாற்றலைச் சார்ந்து நாம் வாழ்வதை அதிகம் பாதித்துள்ளது.
ஆனாலும் கோவிட்-19 இரண்டாவது அலையின் போது
எதுவும் செய்யாது அரசு ஒதுங்கி நின்ற வேளையில், உயிர் வாழ்வது, இறப்பது என்ற
தேர்வுகளுக்கிடையே ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக தொலைபேசி மூலம் நாம் விடுத்த
வேண்டுகோள்கள் இன்றளவிலும் நம்முடைய நினைவுகளில் அழியாது நின்று கொண்டிருக்கின்றன.
https://thewire.in/politics/mobile-phone-talking-things-freedom-of-expression-oppression
Comments