சம்சுல் இஸ்லாம்
தண்டிக்கப்படுவதற்குப் பதிலாக கிரிமினல் குற்றமிழைத்த ஹிந்துத்துவா குற்றவாளிகள்
இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறர்கள்!
சுமார் எண்பது சதவிகிதம் பேர்
ஹிந்துக்களாக இருக்கின்ற 138 கோடி இந்தியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வேலை
வாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு, அமைதியான சூழலை வழங்குவதில் அனுபவம்மிக்க ஆர்எஸ்எஸ் முழுநேர
ஊழியரும், ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் பாஜக தலைமையில் இந்திய அரசிற்குத் தலைமையேற்றிருப்பவருமான
நரேந்திர மோடி மிக மோசமாகத் தோல்வியடைந்திருக்கிறார். ஆனாலும் 2020 ஆகஸ்ட் ஐந்தாம்
நாளன்று நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான மகிழ்ச்சியான செய்தியுடனே அவர் காணப்பட்டார்.
அன்றைய தினம் மாபெரும் ஹிந்து முனிவரைப் போன்ற தோற்றத்துடன் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு
அடிக்கல் நாட்டிய பிரதமர், ராமர் பிறந்த இடத்தை அழிப்பதற்கான பல முயற்சிகளுக்குப் பிறகு
ராமர் பிறந்த இடம் இறுதியாக விடுவிக்கப்பட்டுள்ளது என்றார். உலக ஹிந்துக்களின் பல நூற்றாண்டு
கால காத்திருப்பு அதன் காரணமாக முடிவிற்கு வந்துள்ளதாக அவர் அப்போது அறிவித்தார். கோவிலுக்கான
அடித்தளத்தை அமைத்ததன் மூலம் மிகச் சிறப்பான அத்தியாயத்தை இந்தியா எழுதிக் கொண்டிருப்பதாகவும்,
பல நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து வருகின்ற அழித்தல், மீட்டெடுத்தல் எனும் தொடர் நிகழ்வுகளிலிருந்து
ராமஜென்மபூமி இப்போது விடுபட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார் (https://indianexpress.com/article/india/ram-mandir-bhumi-pujan-full-text-of-pm-narendramodis-speech-in-ayodhya/).
அந்த விழாவில் கலந்து கொள்வதற்கு
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிட்டுச்
சொல்லத் தக்கது. சூத்திரரான அவர் அங்கே நடந்த பிராமணச் சடங்குக்கு கெட்ட சகுனமாக இருப்பார்
என்று கருதியதே ஒருவேளை அவர் அழைக்கப்படாததற்கான காரணமாக இருந்திருக்கலாம்.
இருட்டடிப்பு செய்யப்பட்ட கோஸ்வாமி துளசிதாஸ்
தன்னுடைய வழக்கமான பொய்களைப் போல,
பாபர் மசூதியைக் கட்டுவதற்காக ராமஜென்ம கோவிலை இடித்தனர் என்பது போன்ற பொய்யைக் கூறவும்
பிரதமர் தவறவில்லை. ஆர்எஸ்எஸ் ஷாகாக்களிடமிருந்து அவர் கடன் வாங்கிக் கொண்டிருந்த அந்தக்
கதையில் அயோத்தி நகரம் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக ஹிந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும்
இடையே ராமர் கோயில் தொடர்பான தொடர்ச்சியான போரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இடமாக
மட்டுமே இருந்தது.
தங்களுடைய எதிரியை (முஸ்லீம்கள்)
வென்றதாகப் பெருமை பேசிய போது பிரதமர் அவதி மொழியில் கோஸ்வாமி துளசிதாஸ் எழுதிய கவிதை
வடிவ காவியப் படைப்பான ராமசரிதமானஸைக் கண்டு கொள்ளத் தவறி
விட்டார். ராமரின் கதையைக் கூறி இந்தியாவை மெய்சிலிர்க்க வைத்த துளசிதாஸின் அந்தப்
படைப்பு ஒவ்வொரு ஹிந்து வீட்டிலும் குறிப்பாக
வட இந்தியாவில் உள்ள ஹிந்துக்களின் வீடுகளில் தெய்வத்தன்மையுடன் இடத்தைப் பிடித்துள்ளது.
கோஸ்வாமி துளசிதாஸ் அந்தப் படைப்பை 1575-76இல் எழுதினார். ராமர் பிறந்த இடத்திலிருந்த
கோவில் 1538-1539இல் அழிக்கப்பட்டதாக ஹிந்துத்துவவாதிகள் கூறி வருகின்றனர். ராமஜென்ம
பூமியில் உள்ள கோவில் அழிக்கப்பட்டு கிட்டத்தட்ட முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு
எழுதப்பட்ட ராமசரிதமானஸில் அந்த அழிவு நிச்சயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால்
அவ்வாறு எந்தவொரு நிகழ்வும் அதில் குறிப்பிடப்படவில்லை.
ராமர் மற்றும் அவரது ஆட்சி குறித்த
வரலாற்றுச் சிறப்புமிக்க தனது படைப்பில் ஆகச் சிறந்த கதைசொல்லியும், ராம வழிபாட்டாளருமான
துளசிதாஸ் உண்மையைப் பேசவில்லை என்று ஹிந்துத்துவா வெறியர்கள் கூற முயல்கிறார்களா?
அவ்வாறு கூறுவது கோஸ்வாமி துளசிதாஸின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதற்கான
முயற்சியாகவே இருக்கும் அல்லவா? ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவில் இடிக்கப்பட்டது
குறித்து சில உள்நோக்கங்களுடனே கோஸ்வாமி துளசிதாஸ்
வாய்மூடி மௌனம் சாதித்திருக்கிறார் என்று ஹிந்துத்துவ
வெறியர்கள் நிரூபிக்கப் பார்க்கிறார்களா?
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதித்தல்
அயோத்தியில் இருந்த எந்தவொரு கோவிலையும்
இடித்துத் தள்ளி விட்டு பாபர் மசூதி கட்டப்படவில்லை, பாபர் மசூதிக்குள் 1949ஆம் ஆண்டு
டிசம்பர் 22/23 நாட்களுக்கு இடைப்பட்ட இரவில் ராம் லல்லா சிலை வைக்கப்பட்டது சட்டவிரோதமான
செயல், 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டத்தின்
ஆட்சியை மிக மோசமாக மீறிய செயல் என்று 2019ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பதாம் நாள் வெளியான
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிடுகிறது. ராமஜென்மபூமி இப்போது பல நூற்றாண்டு காலமாகத்
தொடர்ந்து வருகின்ற அழித்தல் மற்றும் மீட்டெடுத்தல் எனும் தொடர் நிகழ்வுகளிலிருந்து
விடுபட்டுள்ளது என்று கூறிய பிரதமர் உச்ச நீதிமன்றத்துடன் வெளிப்படையாக முரண்பட்டே
பேசியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அந்த தீர்ப்பு 450 ஆண்டுகளுக்கு முன்பு
கட்டப்பட்ட மசூதியை முஸ்லீம்களிடமிருந்து தவறாகப் பறித்துள்ளனர் என்ற உண்மையையும் அடிக்கோடிட்டுக்
காட்டியிருந்தது கவனிக்கத் தக்கதாகும்.
தன்னுடைய அத்தனை கண்டுபிடிப்புகளுக்குப்
பிறகும் உச்சநீதிமன்றம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டிக் கொள்ள
அனுமதித்தது வேறு விஷயம். அயோத்தியில் பிரதமர் ஆற்றிய அந்த உரைக்காக அவர் மீது நீதிமன்ற
அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள்
மசூதியை இடித்த ஆர்எஸ்எஸ்ஸின் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்திடமே அந்தக் கோவிலைக்
கட்டிக் கொள்வதற்கான அனுமதியை அளித்தது உண்மையில் வெட்கக்கேடான காரியமாகும்! (https://scroll.in/article/943337/no-the-supreme-court-did-not-uphold-the-claim-that-babrimasjid-was-built-by-demolishing-a-temple)
தவறுகளைத் தேர்ந்தெடுத்துத் திருத்திக் கொள்வது
வரலாற்றில் செய்யப்பட்ட தவறுகளுக்கு
நீதி வழங்கப்படுகிறது என்று கூறி ஹிந்துத்துவாவினர் பாபர் மசூதியை இடித்து அயோத்தியில்
பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்படுவதை நியாயப்படுத்தி வருகின்றனர். ஹிந்து, முஸ்லீம்
என்று இருவேறாகப் பார்க்கப்படுகின்ற இந்தியாவின் கடந்த காலம் அதற்கான வரம்புகளுடன்
உள்ளது. ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகமான இந்தியாவில் முஸ்லீம் பெயர்களுடன் இருந்தவர்கள்
இந்தியாவை ஆண்டது/தாக்கிய கால அளவு சுமார் 700-800 ஆண்டுகள் மட்டுமேயாகும்.
சோம்நாத் கோவில்
முகமது கஜினியால் 1025-26இல் இடிக்கப்பட்டது பற்றி ஆர்எஸ்எஸ்-ஹிந்துத்துவா சித்தாந்தவாதியும்,
ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவருமான எம்.எஸ்.கோல்வால்கர் எழுதியுள்ளது பற்றி இங்கே
காணலாம்.
‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்
மக்கள் மீது படையெடுக்குமாறு வெளிநாட்டினரை நம்முடைய மக்களே அழைத்தனர். இப்போதும் அதுபோன்ற
ஆபத்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற சோம்நாத் கோவில் எவ்வாறெல்லாம்
களங்கப்படுத்தப்பட்டது, அழிக்கப்பட்டது குறித்து வரலாற்றின் பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.
சோம்நாத்தின் செல்வம், சிறப்பைப் பற்றி கேள்விப்பட்ட முகமது கஜினி அந்தச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காக கைபர் கணவாயைக்
கடந்து பாரதத்தின் மீது கால் வைத்தான். அவன் ராஜஸ்தானின் பெரும் பாலைவனத்தைக் கடக்க
வேண்டியிருந்தது. ஒருமுறை அவனது படை உணவின்றி, தண்ணீரின்றி தவித்தது. அவனுடைய
தலைவிதி அவ்வாறிருந்தால் அவன் அப்போதே அழிந்து போயிருப்பான். ராஜஸ்தானின் கொதிக்கும்
மணற்பரப்பு அவனுடைய எலும்புகளைத் தின்று செரித்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தங்களுக்கு எதிராக
விரிவாக்கத் திட்டங்களுடன் சௌராஷ்டிரா இருப்பதாக உள்ளூர்த் தலைவர்களை முகமது கஜினி
நம்பச் செய்தான். அவர்கள் தங்களுடைய முட்டாள்தனம், அற்பத்தனத்தால் அவனை நம்பினர். அவனுடன்
இணைந்து கொண்டனர். சிறப்புமிக்க அந்தக் கோவிலின் மீது முகமது கஜினி தாக்குதலைத் தொடுத்தபோது
நமது ரத்தத்தின் ரத்தங்களாக, ஊனுடன் ஊனாக, ஆன்மாவின் ஆன்மாவாக இருந்த ஹிந்துக்களே அவனுடைய
ராணுவத்தின் முன்னணியில் நின்றனர். ஹிந்துக்களின் உதவியுடனே சோம்நாத் களங்கத்திற்குள்ளானது.
இவையனைத்தும் வரலாற்று உண்மைகளாகும்’
(மதுரையில்
எம்.எஸ். கோல்வால்கர் ஆற்றிய இந்த உரை 1950ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் நாளிட்ட ஆர்கனைசர்
பத்திரிகையில் வெளியாகியுள்ளது பக். 12-15).
கடந்த
காலத்தில் இந்தியாவில் தங்கள் மதத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைவது எனும் முக்கியமான பிரச்சினையைத்
தீர்த்து வைப்பதில் ஆர்எஸ்எஸ்-பாஜக அரசு சார்ந்தவர்கள் உண்மையிலேயே தீவிரமாக இருக்கிறார்கள்
என்றால், பூரியில் உள்ள ஜகநாதர் கோவிலை புத்த மதத்தினரிடம் ஒப்படைக்கும் வேலையை அவர்கள்
உடனடியாகத் தொடங்கிட வேண்டும். ஹிந்துத்துவா அரசியல், ஹிந்து இந்தியாவின் மறுமலர்ச்சிக்கான
சின்னம் என்று ஆர்எஸ்எஸ் கருதி வருகின்ற சுவாமி விவேகானந்தர் பண்டைய இந்தியாவின் கடந்த
காலத்தை விவரிப்பதில் தலைசிறந்தவராக இருந்தவர். ஜகநாதர் கோவில் முதலில் பௌத்தக் கோவிலாகவே
இருந்தது என்பதை எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.
‘இந்திய
வரலாற்றைப் பற்றி அறிந்த எவரொருவருக்கும்... ஜகநாதர் கோவில் பழமையான பௌத்தக் கோவில்
என்பது நன்கு தெரியும். இந்தக் கோவிலையும், மற்றவற்றையும் எடுத்துக் கொண்ட நாம் அவற்றை
மீண்டும் ஹிந்துமயமாக்கிக் கொண்டோம். அதுபோன்ற பல விஷயங்களை நாம் இன்னும் செய்ய வேண்டியுள்ளது’
(சுவாமி
விவேகானந்தர், சுவாமி விவேகானந்தரின் முழுமையான படைப்புகள் மூன்றாவது தொகுதியில் இடம்
பெற்றுள்ள ‘இந்திய முனிவர்கள்’, அத்வைத ஆசிரமம், கல்கத்தா, பக்கங்கள் 264)
ஹிந்துத்துவ
முகாமால் நேசிக்கப்பட்டு வருகின்ற மற்றொரு
படைப்பாளியான பங்கிம் சந்திர சட்டர்ஜியும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஜகநாத் கோவிலுடன்
அடையாளப்படுத்தப்பட்டு அறியப்படும் ரத யாத்திரை உண்மையில் ஒரு பௌத்த சடங்காகும் என்று
பங்கிம் கூறியுள்ளார்.
‘ஜகநாத்
கோவிலில் ரத யாத்திரை திருவிழாவின் தோற்றம் பற்றிய நம்பத் தகுந்த தகவலை பில்சா டோப்ஸ்
பற்றிய தனது படைப்பில் ஜெனரல் கன்னிங்ஹாம் கொடுத்துள்ளதை நான் நன்கு அறிவேன். அதே பாணியிலான பௌத்தர்களின் திருவிழாவில் பௌத்த மத நம்பிக்கையின்
மூன்று அடையாளங்களான புத்தம், தம்மம், சங்கம் ஆகிய மூன்றும் ரதத்தில் வரையப்பட்டிருந்ததை
கன்னிங்ஹாம் கண்டறிந்துள்ளார். ரதம் பற்றி அவர்
கூறுவதை நானும் நம்புகிறேன். ரதத்தில் இப்போது இடம் பெற்றுள்ள ஜகநாத், பலராம், சுபத்ரா
ஆகியோரின் உருவங்கள் புத்தம், தம்மம், சங்கம் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு,
அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நகல்களாக உள்ளன என்ற கோட்பாடு உண்மைக்கு மிக
அருகில் உள்ளது’.
(சட்டர்ஜி,
பங்கிம் சந்திரா, 'ஹிந்து பண்டிகைகளின் தோற்றம்' கட்டுரைகள் & கடிதங்கள், ரூபா,
தில்லி, 2010, பக். 8-9.)
பூரி
கோவில் மட்டுமே உண்மையில் ஹிந்துமயமாக்கப்படவில்லை. ஆரிய சமாஜத்தின் நிறுவனரான சுவாமி
தயானந்த சரஸ்வதி தன்னுடைய சத்யர்த் பிரகாஷத்தில் சங்கராச்சாரியாரின் வீரதீரத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார்.
‘அவர் பத்து
ஆண்டுகளாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, சமணத்தை மறுத்து, வேத மதத்தை ஆதரித்து
வந்தார். பூமிக்கடியில் இருந்து தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ள உடைந்த உருவங்கள் அனைத்தும் சங்கரர் காலத்தில் உடைக்கப்பட்டவையாகும்.
அதே சமயத்தில் ஆங்காங்கே பூமிக்கடியில் முழுமையாகக் கிடைக்கின்ற உருவங்கள் சமணத்தைத்
துறந்தவர்கள் உடைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சமணர்களால் புதைத்து வைக்கப்பட்டவையாகும்’.
(சுவாமி
தயானந்த சரஸ்வதி எழுதிய சத்யர்த் பிரகாஷ், பதினோராவது அத்தியாயம், பக்கங்கள் 347)
பௌத்தம்,
சமணம் போன்ற பூர்வகுடி மதங்களின் மீது நேசத்தை வெளிப்படுத்தும் வகையில் தங்களால் அபகரிக்கப்பட்ட
கோவில்கள், விகாரைகளை விரைவில்
அவற்றிற்கு உரியவர்களிடமே ஒப்படைப்பதற்கான முயற்சிகளை ஹிந்துத்துவா ஆட்சியாளர்கள் மேற்கொள்ள
வேண்டும்.
http://shamsforpeace.blogspot.com/2023/12/31-years-after-babri-mosque-demolition.html
Comments